விவசாயக் கடன் தள்ளுபடி: விவசாயிகளுக்கு நிஜமான உதவியா? அல்லது அரசியல் ஏமாற்றா?
விவசாயக் கடன் தள்ளுபடி: தற்காலிக மிட்டாயா?
தற்காலிக மிட்டாய்; நிரந்தரச் சுமை
கடன் தள்ளுபடி என்பது ஒரு நோயாளிக்குக் கொடுக்கப்படும் தற்காலிக 'பெயின் கில்லர்' மாத்திரை போன்றதே தவிர, அது நோயைக் குணப்படுத்தும் நிரந்தர மருந்து அல்ல. விவசாயிகளின் உண்மையான பிரச்சனைகளான உரம் மற்றும் விதை விலை உயர்வு, விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது, இடைத்தரகர்களின் சுரண்டல் போன்ற எதற்கும் இந்த அரசிடம் தீர்வு இல்லை. தற்போதைய கடனைத் தள்ளுபடி செய்வதன் மூலம், அடுத்த போகத்திற்கு விவசாயிகள் மீண்டும் வங்கியின் வாசலில் போய் கையேந்தி நிற்கும் அவலநிலையே தொடர்கிறது.
தகுதியுள்ள ஏழைகளுக்குக் கிடைக்காத பலன்
அரசாங்கம் அறிவிக்கும் பெரும்பாலான தள்ளுபடிகள் கூட்டுறவு வங்கிகளில் அதிகாரப்பூர்வமாகக் கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே போய்ச் சேருகிறது. ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பாலான ஏழை மற்றும் சிறு விவசாயிகள் தங்களின் அவசரத் தேவைக்காக கந்துவட்டிக்காரர்களிடமும், தனியார் நிதி நிறுவனங்களிடமும்தான் அதிக வட்டிக்குக் கடன் வாங்கித் தவிக்கிறார்கள். இந்த பாமர விவசாயிகளுக்கு அரசின் தள்ளுபடி திட்டங்களால் ஒரு பைசா கூடப் பயன் கிடைப்பதில்லை. கடுமையான விதிமுறைகளும், தகுதி வரம்புகளும் உண்மையான விவசாயிகளை இந்த வளையத்திற்குள் வரவிடாமல் தடுத்துவிடுகின்றன.
விவசாயிகளுக்குத் தேவை அரசாங்கம் போடும் பிச்சை போன்ற தள்ளுபடி அல்ல; அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற நியாயமான லாபம.உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான மானியங்கள் மற்றும் இடைத்தரகர்கள் இல்லாத நேரடி விற்பனை மையங்கள் மட்டுமே விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கும். கடன் தள்ளுபடி என்ற பெயரில் லட்டு கொடுப்பது போல் அறிவிக்கப்படும் திட்டங்கள் விவசாயிகளை நிரந்தரக் கடனாளியாகவே வைத்திருக்கும் ஒரு ஏமாற்று வேலையே ஆகும்

Comments